என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நண்பர்கள் படுகாயம்"
சுரண்டை:
நெல்லை மாவட்டம் சுரண்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் வேல்சாமி மகன் அருள் (வயது 17). அம்மன் சன்னதியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் சிவா (15), அம்பேத்கர் நகர் பால்துரை மகன் சங்கை (17). பள்ளி மாணவர்களான அருள், சிவா, சங்கை ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்கள் பங்களா சுரண்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இன்று காலை நண்பர்கள் சுரண்டை-சாம்பவர் வடகரை சாலையில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந் தனர். அவர்கள் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த மாணவன் அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சிவா, சங்கை ஆகியோர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்-இன்ஸ் பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மாணவர்கள் சிவா, சங்கை ஆகியோரை மீட்டு தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பலியான அருள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சுரண்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் எது? அதனை ஓட்டி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். நடை பயிற்சி சென்ற மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு ள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் மானந்தங்குடியை சேர்ந்தவர் குமார்(வயது42). இவரது நண்பர்கள் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த அன்பழகன்(30), நெடுங்குளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(38). 3 பேரும் பிளம்பர்கள்.
நேற்று 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது நன்னிலம் மதுவிலக்கு போலீசார் ஜீப்பில் ரோந்து பணிக்கு சென்றுள்ளனர். போலீஸ்காரர் முருகன் ஜீப்பை ஓட்டி சென்றுள்ளார். பூந்தோட்டம் பகுதி பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது 3 பேர் மீதும் போலீசாரின் ஜீப் மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்ற 2 பேரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.
விபத்து குறித்து குமாரின் அண்ணன் சங்கர், பேரளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்